திருச்சி திமுக தெற்கு மாவட்டத்தில் கலைஞரின் சிலை அமைக்க அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர்கள் பங்கேற்பு.
திருச்சியில் திமுக மத்திய மற்றும் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கலைஞர் அறிவாலயத்தில் மட்டுமே கலைஞரின் திருவுருவ சிலை உள்ளது. கலைஞரின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் அறிவாலயம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பாக திருச்சி கிழக்கு மாநகரம் கிழக்குத் சட்டமன்ற தொகுதியில்
டி வி எஸ் டோல்கேட் ரவுண்டானவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின்
உருவச்சிலை அமைய உள்ள பீடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்
கே. என். நேரு அவர்கள் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
விழாவில் மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமத் முன்னிலை வகித்தர்.
இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வண்ணைஅரங்கநாதன்,
சேகரன் , மாவட்ட நிர்வாகிகள் கோவிந்தராஜ், செங்குட்டுவன், மூக்கன்,
லீலாவேலு. குணசேகரன், மாநகர நிற்வாகிகள் நுர்காண் சந்திரமோகன், பொன் செல்லையா, சரோஜினி பகுதி கழக செயலாளர்கள் மணிவேல், நீலமேகம், தர்மராஜ், ராஜ்முகமது, மோகன் பாபு, சிவக்குமார் மற்றும் ஒன்றிய நகர பேரூர் வட்ட கழக செயலாளர்கள். அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்
கலந்து என பலரும் கலந்து கொண்டனர்.