ஜனவரி 5ஆம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம். திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்’
பொதுத்துறை நிறுவனங்களை போன்று
ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும்
திருச்சியில் நடந்த கூட்டத்தில் தமிழக அரசுக்கு கோரிக்கை.

தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் திருச்சி மாவட்ட செயற்குழு கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள திருமண மஹாலில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு
மாநில தலைமை நிலைய செயலாளர் அண்ணாதுரை தலைமை தாங்கினார்.
திருவறும்பூர் பகுதி பொறுப்பாளர்கள்
சுபாஷ் சந்திர போஸ்,கந்தசாமி முனீஸ்வரன் கணேஷ்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில துணைத்தலைவர் என்.டி.ராமசாமி மற்றும் மாநில இணை செயலாளர் தங்க பூமி மற்றும் பீட்டர் சேகர், சிவ தியாகராஜன், ஆறுமுகம்,
வேல்முருகன், ரத்தினம் மற்றும் மாவட்டச் துணை தலைவர்கள், இணை செயலாளர்கள் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
வரவேற்புரை
மாவட்ட தலைவர் கணேசன் மாவட்டச் செயலாளர் பிரகாஷ் ஆகியோர் வரவேற்றனர். முடிவில் மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட துணை தலைவர் முத்து
மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாவட்ட நிர்வாகிகள் மற்றும் வட்ட நிர்வாகிகள் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் திமுக அரசு தேர்தல் அறிக்கையில் கூறிய பொது விநியோகத் திட்டத்தை தனித்துறையாக அறிவிக்க வேண்டும் மகளிர் உரிமை திட்டம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை பொதுமக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வரும் ரேஷன் கடை ஊழியர்களுக்கும் சிறப்பு தொகை வழங்க வேண்டும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு தீபாவளி பொங்கல் போனஸ் வழங்குவது போல 20 சதவீதம் போனஸ் ரேஷன் கடை ஊழியர்களுக்கு வழங்க வேண்டும்.மேலும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற ஜனவரி 5ஆம் தேதி தமிழகத்தில் உள்ள ஐந்து மண்டலங்களில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.