திருச்சி தெற்கு மாவட்டம், திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட, மலைக்கோட்டை பகுதியில், இ.பி.ரோடு முதல் ஆண்டாள் தெரு வரை சைக்கிள் பேரணியாக,
திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர், அன்பில் மகேஸ் பொய்யாமொழி எம்எல்ஏ தலைமையில் சென்று, “ஸ்டாலின்தான் வராறு விடியல் தான் தரப்போகிறார் என்று ஆடியோ மற்றும் வீடியோ பாடலை வெளியீட்டு, உரையாற்றும் பொழுது தமிழகத்தில் உள்ள 200 தொகுதிகள் மட்டுமல்ல 234 தொகுதிகளிலும் வெல்லப் போவது திமுக தான், தலைவர் தளபதி அரியணையில் அமர்வது உறுதியாகி விட்டது என கூறினார் .
இந்நிகழ்வில் பகுதி கழக செயலாளர்கள் மு.மதிவாணன், ஜி.ராஜசேகர், எஸ்.பாலமுருகன், பகுதி கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள் என பெரும் திரளாக பொதுமக்கள் கலந்து கொண்டனர் .