திருச்சி பெரிய கம்மாளத் தெருவில்
கடையின் பூட்டை உடைத்து ரூ 1 லட்சத்து 90 ஆயிரம் பணம் கொள்ளை.
திருச்சி உறையூர் வாத்துக்கார தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 45) பெரிய கம்மாளத்
தெருவில் பேன்சி ஸ்டோர் வைத்து நடத்தி வருகிறார்.
இவர் வழக்கம் போல் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
பின் மறுநாள் காலையில் கடையை திறக்கச் சென்றபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பிறகு அவர் கடையில் உள்ளே சென்று பார்த்த போது கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்து 550 பணம் திருட்டுப் போய் இருப்பது தெரியவந்தது.
இது குறித்து கோட்டை போலீசாருக்கு கார்த்திக் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள் இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.