திருச்சி பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் கோர்ட்டில் சரணடைந்தார் .
திருச்சியை தலைமையிடமாக கொண்டு துவக்கப்பட்ட பிரணவ் ஜுவல்லரி, கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, பொதுமக்களிடம், பல நுாறு கோடி ரூபாய் டிபாசிட் வசூலித்தது.
அவர்கள் கூறியபடி, பணம் கட்டியவர்களுக்கு கூடுதல் தொகையுடன், அசலும் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில், கடைகள் மூடப்பட்டு, உரிமையாளர் மதன், அவரது மனைவி கார்த்திகா தலைமறைவாகினர்.
இதையடுத்து பிரணவ் ஜுவல்லரி மீது, திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் 1,000த்துக்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், மதனும், அவரது மனைவியும் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க, ‘லுக் அவுட்’ நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த மதன், நேற்று மதுரை டான்பிட் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரது மனைவி இன்னும் தலைமறைவாக உள்ளார்.