இன்று அதிகாலை 4 மணியளவில் தூத்துக்குடியில் இருந்து கடலூருக்கு ரசாயன உர லோடுடன் லாரியொன்று வந்து கொண்டிருந்தது.
கங்கா லாரி சர்வீசுக்கு சொந்தமான அந்த
லாரியை அர்ஜுன் என்பவர் ஒட்டி வந்தார்.
லாரி திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவி நகர் அருகே வந்தபோது லாரி ஓட்டுனர் கண் அயர்ந்ததாக கூறப்படுகிறது.
கண்ணிமைக்கும் நேரத்தில் லாரி சாலை பக்கவாட்டில் இருந்த நிழற்குடையை மோதி உடைத்து
கால்வாயில் கவிழ்ந்தது.
அப்போது நிழற்குடையில் அமர்ந்திருந்த அடையாளம் தெரியாத சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உரமூட்டைகள் நடுவே சிக்கி கொண்டார்.
பலத்த காயமடைந்த அவர் உயிர் இழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஆயினும் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் எவ்வித காயமின்றி உயிர் தப்பினார் .
தகவல் அறிந்து சம்பவத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் கோட்டை காவல் நிலைய போலீசார் லாரியை மீட்டு ஓட்டுநர் அர்ஜுனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் விபத்தில் சிக்கிய நபரை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.