திருச்சியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் பாபர் மசூதி இடிப்பு தினம் .
டிசம்பர் 6 பயங்கரவாத எதிர்ப்பு நாளாக நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினரும் திருச்சி மரக்கடை முன்பாக மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக் கூட்டத்தினை நடத்தினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட தலைவர் முஹம்மது ராஜா, மேற்கு மாவட்ட தலைவர்
யைஸ் அகமது ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
மேலும் மாவட்டச் செயலாளர் இப்ராம்ஷா, மாவட்ட மமக செயலாளர் இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் ஹுமாயூன் கபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.