ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட ஓபிஎஸ் அணி சார்பில் அஞ்சலி செலுத்தி அன்னதானம்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி திருச்சி மாநகர் மாவட்ட ஓ.பி.எஸ்.அணி சார்பில் ஜெயலலிதா படத்துக்கு அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கினர் .
இந்த நிகழ்ச்சியில் அவைத்தலைவர் வக்கீல் ராஜ்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு,பால்ராஜ் ராஜேந்திரன் அருணாச்சலம், சந்து கடை சந்துரு , கணேசன் பிரேம் , எடத்தெரு சந்திரன், செங்கல் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர் .