
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பூரண நலம் பெற வேண்டி திருச்சி மாவட்ட தளபதி விஜய் ரசிகர்கள் சார்பில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் சிவன் கோயிலிலும் தலையெழுத்தை மாற்றக்கூடிய பிரம்மன் சன்னதியிலும் கேப்டன் விஜயகாந்த் சித்திரை நட்சத்திரத்தில் அவருடைய பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு அவர் மீண்டும் மக்கள் பணியாற்ற வரவேண்டும் என்று தளபதி விஜய் அவர்கள் சார்பிலும் திருச்சி மாவட்ட தளபதி விஜய் ரசிகர்கள் கோவிலில் மண் சோறு சாப்பிட்டு வேண்டுதல் செய்தார்கள்.

விஜயின் இரண்டாவது படமாக செந்தூரப் பாண்டி திரைப்படத்திற்காக மிகவும் பிசியான நேரத்திலும்
கால்சீட் வழங்கி நடிகர் விஜய்க்கும், இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அவர்களுக்கும் உதவி புரிந்த கேப்டன் அவர்கள் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டி

தமிழகத்திலே முதல்முறையாக நடிகர் விஜய்க்காக ரசிகர் மன்றம் தொடங்கிய முன்னாள் மாவட்ட தலைவர்
ஆர்.கே. ராஜா தலைமையில் விஜய் ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டு வேண்டுதலை செய்தனர்.

