அம்மா மக்கள் முன்னேற்ற கழக பூத் ஆலோசனை கூட்டம் திருச்சி மாநகர செயலாளர் செந்தில்நாதன் ஏற்பாட்டில் நடைபெற்றது .
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர், டி.டி.வி தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க,
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் பணி குறித்த ஆலோசனைக் கூட்டம் திருச்சி மாநகர் மாவட்ட அலுவலகத்தில் பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி தலைமையில்,
மண்டல பொறுப்பாளர், தலைமை நிலைய செயலாளர், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ராஜசேகரன் முன்னிலையில்,
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான ப.செந்தில்நாதன் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதில் மாவட்ட கழக நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி செயலாளர்கள், ஒன்றிய கழகச் செயலாளர்கள், பேரூராட்சி செயலாளர்கள் மற்றும் சார்பு அணி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பூத் கமிட்டி அமைப்பது பற்றியும், வருகின்ற 5-ம் தேதி சென்னையில் நடக்கிவிருக்கின்ற, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாள் பேரணியில் கலந்து கொள்வதைப் பற்றியும், நிர்வாகிகளுக்கு, தலைமை நிலைய செயலாளர் ராஜசேகரன் ஆலோசனைகள் வழங்கினார்.