திருச்சி தென்னூரில் உள்ள அதிமுக மாநகர் மாவட்ட அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநகர் மாவட்டச்செயலாளரும் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் நடைபெற்றது.
கூட்ட த்தில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசியதாவது,
திருச்சி வழியாக புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறும் புதிய திட்டபணிகள் தொடக்கவிழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திருச்சி விமான நிலையத்தில் மாநகர் மாவட்ட கழகம் சார்பில் எழுச்சியான வரவேற்பு அளிக்க வேண்டும்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் திருச்சி மாநகர் மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட கிழக்கு, மேற்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட விருப்பமுள்ள நபர்கள், கழக பொறுப்பாளர்கள், கடைக்கோடி தொண்டர்கள் முதல் மாநில நிர்வாகிகள் வரை விருப்பு வேட்புமனு தாக்கல் செய்ய முன் வர வேண்டும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்டம் சார்பில் திருச்சி மாநகரில் ஆங்காங்கே பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்த வேண்டும்.
தலைமை அறிவுறுத்தலின்படி, சட்டமன்ற தேர்தலில் பணியாற்ற இளைஞர், இளம்பெண்கள் பாசறை, மகளிர் குழு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன் முழுமையான பட்டியல் வழங்கப்பட்டு, மண்டல பொறுப்பாளர் ஆய்வு நடத்தி இறுதி செய்வார் இதற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இக்கூட்டத்தில் இணைச் செயலாளர் ஜாக்குலின், துணைச் செயலாளர் வனிதா, எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் ராஜ்குமார், பேரவை செயலாளர் கருமண்டபம் வி.பத்மநாதன், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சிந்தை முத்துக்குமார், மகளிரணி தமிழரசி சுப்பையா, அண்ணா தொழிற்சங்கம் ராஜேந்திரன், பாசறை செயலாளர் இலியாஸ், கலைப்பிரிவு செயலாளர் அழகரசன் விஜய், வர்த்தகர் பிரிவு மாவட்ட துணைச்செயலாளர் டிபன் கடை கார்த்திகேயன், மீனவர் அணி அப்பாஸ், ராமச்சந்திரன், தாயார் சீனிவாசன், கருடா நல்லேந்திரன், டாக்டர் சுப்பையா பாண்டியன் , வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு,
பகுதி செயலாளர்கள் அன்பழகன், ஏர்போர்ட் விஜி, எம்.ஆர்.ஆர். முஸ்தபா, ஞானசேகர்,
பொதுக்குழு உறுப்பினர் வக்கீல்கள் கங்கைச் செல்வன், சுரேஷ், ராஜா, வரகனேரி சசிக்குமார், காசிப்பாளையம் சுரேஷ், கயிலை கோபி, தர்கா காஜா, அஸ்வினி மோகன், நவசக்தி சண்முகம், லயன் கார்த்தி கேயன்,பொன். அகிலாண்டம், செல்வகுமார், சந்திரன், கட்பீஸ் ரமேஷ், பாபு,
அக்தர் பெருமாள், மகளிர் அணி துணை தலைவர் தேன்மொழி. துணை செயலாளர்கள் ஜெயஸ்ரீ, இந்திரா பொருளாளர் பத்மாவதி , சுந்தரி ராஜலட்சுமி, உறையூர் வசந்தி, செந்தண்ணீர்புரம் கணேசன், கே.சி.பி.ஆனந்த், வட்டச் செயலாளர்கள் சையது ரபீக்,ஜெயராஜ், பாபு, சந்திரசேகர், பிரகதீஷ், சந்துரு, ஆட்டோ ரஜினி, என்ஜீனியர் ராஜா, விவசாய அணி விசுவநாதன், கலைவாணன், காஜாப்பேட்டை சரவணன், ரமணிலால், செங்கல் மணி, வைத்தியநாதன், ஒத்தக்கடை மகேந்திரன், வேலுப்பிள்ளை, கதிர்வேல், எம்.ஜே.பி.வெஸ்லி, குரு மூர்த்தி, ஆனந்த்பாபு, புத்தூர் சதீஷ் குமார், சந்திரசேகர், அப்பாக்குட்டி உள்பட வட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.