திருச்சி அருகே குளத்தில் இருந்து தண்ணீர் எடுத்த லாரிகளை சிறைபிடித்த விவசாயிகள்.
புதுக்கோட்டை சாலை விரிவாக்க பணிக்காக ஏற்படுத்தப்பட்ட குண்டூர் பெரிய குளத்திலிருந்து தண்ணீர் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று லாரிகளை சிறைப்பிடித்தும், அதிகாரிகளை முற்றுகையிட்டும் குண்டூர் பகுதி விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நவல்பட்டு போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இனி தண்ணீர் எடுக்க மாட்டார்கள் என உறுதியளித்ததை தொடர்ந்து சிறை பிடித்த லாரிகளை விடுவித்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.