திருச்சியில் பெருகிவரும் கஞ்சா, லாட்டரி விற்பனை.திருச்சி போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுப்பாரா? பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகரன்.
திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்சி மாநகரில் தற்போது கஞ்சா மற்றும் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை அமோகமாக காய்கறி விற்பனை போல் காய்கறிகள் கூட 24 மணி நேரமும் கிடைக்காது, ஆனால் கஞ்சா, லாட்டரி மற்றும் டாஸ்மாக் மதுபானங்கள் 24 மணி நேரமும் தாராளமாக கிடைக்கிறது.
குறிப்பாக காந்தி மார்க்கெட், பாலக்கரை,கோட்டை, பெரிய ஆஸ்பத்திரி காவல் நிலையங்களுக்கு உட்பட்ட இடங்களில் கஞ்சா, லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அவர்கள் பெயரளவில் பான்பராக், புகையிலை போன்ற போன்ற போதை வஸ்துகள் விற்பனை செய்பவர்களை கண்தொடைப்புக்காக கைது நடவடிக்கையில் ஈடுபடுகிறார்..
ஆனால் கஞ்சா, லாட்டரி, கள்ள சந்தையில் டாஸ்மாக் மதுபானம் விற்பனை செய்பவர்களை கண்டு கொள்வதில்லை.
இவர்களை இரும்பு கரம் கொண்டு போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.