ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவிற்கு கான முகூர்த்தக்கால் நாடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது
ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவிற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வருடம் முழுவதும் திருவிழா நடைபெறும். அதில் பிரசித்தி பெற்றது வைகுண்ட ஏகாதசி திருவிழா மார்கழி மாதத்தில் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டிற்கான வைகுண்ட ஏகாதசி பெருவிழா வரும் டிசம்பர்12 ஆம்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. வைகுண்ட ஏகாதசியையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் முகூர்த்தகால் நடும் வைபவம் ஆயிரங்கால் மண்டபம் மணல் வெளியில் இன்று ( 25.10.2023 ) காலை நடைபெற்றது.
முகூா்த்தகாலானது சந்தனம் பூசி, மாவிலை, மாலை அணிவித்து வேத மந்திரங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க, யானை ஆண்டாள் ஆசியுடன் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையா் மாாியப்பன், தலைமை அா்ச்சகா் சுந்தா் பட்டா், மேலாளா் தமிழ்ச்செல்வி, கண்காணிப்பாளா்கள் வேல்முருகன், கோபாலகிருஷ்ணன், வெங்கடேசன், சரண்யா, மீனாட்சி, கோவில் பணியாளா்கள் பங்கேற்றனா்.
வைகுண்ட ஏகாதசியானது பகல்பத்து, இராப்பத்து என 21 நாட்கள் நடைபெறும்.12 ஆம் தேதி தொடங்கும் இந்த விழாவின் முக்கிய திருவிழாவான சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு டிசம்பர் 23ஆம் தேதி சனிக்கிழமை காலை 04.00 மணிக்கு நடைபெற உள்ளது.