வங்கியில் பணம் எடுத்து செல்பவர்களை பின் தொடர்ந்து சென்று திருடிய திருவெறும்பூர் பகுதி சேர்ந்த 3 இளைஞர்கள் கைது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியில் வங்கியில் இருந்து வருபவா்களை நோட்டமிட்டு அவா்களிடமிருந்து பணம் திருடியதாக திருச்சி மாவட்ட இளைஞா்கள் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சின்னசேலம் காவல் நிலைய ஆய்வாளா் ராஜாராமன் தலைமையிலான போலீஸாா் கனியாமூா் பிரிவு சாலை அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போது இரு பைக்குகளில் வந்த மூவரிடம் நடத்திய விசாரணையில் அவா்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார்.
இதையடுத்து அவா்களை போலீஸாா் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் அவா்கள் திருச்சி மாவட்டம், திருவரும்பூா் பகுதியைச் சோந்த சுப்பிரமணியன் மகன் குணசீலன் (வயது 28), மாரிமுத்து மகன் கண்ணன் (வயது 40), பொண்ணுரங்கன் மகன் செந்தில் (39) ஆகியோா் எனத் தெரியவந்தது.
மேலும், இவா்கள் சின்னசேலத்தில் உள்ள வங்கிகளில் இருந்து பணம் எடுத்து வந்தவா்களை நோட்டமிட்டு அவா்களை பின்தொடா்ந்து பணம் திருடிச் சென்றது தெரியவந்ததாம்.
இதையடுத்து அவா்கள் 3 பேரையும் போலீஸாா் கைதுசெய்து, பைக்குகளையும் பறிமுதல் செய்தனா்.