திருச்சி -புதிய கரூர் பைபாஸ்ரோட்டில், மெகாஸ்டார் தியேட்டர் அருகில் உள்ள ஆக்ஸினா டவர்ஸில் எண்.3 என்ற முகவரியில் இயங்கி வந்த பிரணவ் ஜீவல்லர்ஸ் நகைக்கடையை திருச்சியை சேர்ந்த செல்வராஜ் மகன் மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா ஆகிய இருவரும் இயக்குநர்களாக இருந்து திருச்சி, மதுரை,
சென்னை, கும்பகோணம், நாகர்கோவில், கோயமுத்தூர் ஆகிய இடங்களில் நடத்திய நகைக்கடையில்,
நகை வாங்கினால் செய்கூலி,சேதாரம் இல்லை எனவும்
பல நகை சிறுசேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்கள் இருப்பதாக துண்டு பிரசுரங்கள் மூலம் விளம்பரம் செய்து பல முதலீட்டாளர்களை சேர்த்தும் அவர்கள் செலுத்தும் முதலீட்டு தொகைக்கு 3 மாதத்திற்கு 2 முதல் 3 % வரை போனஸாகவும், 6 முதல் 9 மாதத்திற்கு 6% போனஸாகவும்,
12 மாதத்திற்கு 9% வரை போனஸாகவும் தருவதாக கூறிய ஆசை வார்த்தைகளை நம்பி பொது மக்கள் பலரை முதலீடு செய்ய வைத்து முதலீடு செய்த தொகைக்கு முதிர்வு தேதியின் போது நகைக்கடைக்கு சென்று முதலீட்டாளர்கள் செலுத்திய தொகையை திரும்ப கேட்டபோது திருப்பித்தராமல் இழுத்தடித்து வந்தவர்கள் பொதுமக்களை ஏமாற்றி நம்பிக்கை மோசடி செய்த பிரணவ் ஜுவல்லர்ஸ் நகைக்கடையை அதன் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டதாகவும்,
முதலீட்டாளர்கள் செலுத்திய முதலீட்டு தொகையினை வேண்டுமென்றே திட்டமிட்டு வசூல் செய்து தங்களது சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தி நம்பிக்கை மோசடி செய்த பிரணவ் ஜுவல்லர்ஸ் உரிமையாளர்கள் மதன் அவரது மனைவி கார்த்திகா மற்றும் நகைக்கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி கொடுத்த புகாரின் பேரில் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவில் குற்ற.எண்.08/2023 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே பிரணவ் நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் பல்துறை கட்டிட வளாகம், மன்னார்புரம்,
திருச்சி புகார் கொடுக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விபரம் அறிய 0431-2422220 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம் என
பொருளாதார குற்றப்பிரிவு, காவல் துணை கண்காணிப்பாளர் வில்லி கிரேஸ் தெரிவித்துள்ளார்.