Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அஇஅதிமுக பூத் கமிட்டி பணிகளை மேற்பார்வையிட 82 பொறுப்பாளர்களை நிமித்த எடப்பாடி பழனிச்சாமி. தஞ்சை மத்திய மாவட்டத்திற்கு கழக அமைப்பு செயலாளர் ரத்தினவேல் நியமனம்.

0

 

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி பணிகளை மேற்பார்வையிட மாவட்ட வாரியாக பொறுப்பாளர்களை எடப்பாடி பழனிசாமி நியமித்து உள்ளார்.

லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் நடைபெறும் என்று தெரிகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியிருப்பதால் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. தேசிய அளவில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக எதிர்கட்சிகள் ஓரணியில் திரண்டு ” இந்தியா” என்ற கூட்டணியை அமைத்துள்ளன. காங்கிரஸ் , திமுக , திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ளன.

தேசிய ஜனநாயாக கூட்டணியில் இடம் பெற்று இருந்த அதிமுக, அண்மையில் பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டது. வரும் லோக்சபா தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அதிமுக அறிவித்துள்ளது. பாஜக உடன் கூட்டணியை முறித்துக் கொண்ட பிறகு விறு விறுப்பாக லோக்சபா தேர்தல் வேலைகளையும் தொடங்கி விட்டது. ஒருபக்கம் அதிமுக கூட்டணியில் சில கட்சிகளை இணைக்க முயற்சி நடைபெறுவதாக பேசப்படுகிறது.

இது ஒருபக்கம் என்றால் கட்சியில் நிர்வாக ரீதியாக தேர்தலை மனதில் வைத்து பல்வேறு நடவடிக்கைகளை எடப்பாடி மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இன்று மாவட்ட வாரியாக பொறுப்பாளர்களை அதிமுக நியமித்துள்ளது. சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பூத் வாரியாக பூத் கமிட்டி அமைத்தல் போன்ற பணியினை பார்வையிட பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக மாஜி அமைச்சரின் கட்சி பதவி பறிப்பு.. அதிரடி காட்டிய எடப்பாடி.. ‘ஜகா’ வாங்கியதுதான் காரணமாம்!

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், நடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைப்பதை மேற்பார்வையிட அமைப்பு ரீதியான 82 மாவட்டங்களுக்கும் 82 பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் கேபி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன்ம், பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், மு.தம்பிதுரை,

செ. செம்மலை , பா. வளர்மதி ,கோகுல இந்திரா, கரூர் M. சின்னசாமி,கருப்பசாமி பாண்டியன் உள்ள்பட மூத்த நிர்வாகிகள் பலரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பூத் கமிட்டி அமைத்தல்; இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்துதல் முதலான பணிகள் முறையாக நடைபெற்று வருகின்றனவா என்பதை மட்டும் மேற்பார்வையிடுவதற்காக, மாவட்ட வாரியாக இந்த பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பொறுபாளார்கள் லிஸ்ட்:

1, 2. திரு. கே.பி. முனுசாமி, M.L.A., அவர்கள் கழக துணைப் பொதுச் செயலாளர், முன்னாள் அமைச்சர், கிருஷ்ணகிரி கிழக்கு , கிருஷ்ணகிரி மேற்கு.

3. திரு. திண்டுக்கல் C. சீனிவாசன், M.L.A., அவர்கள் கழகப் பொருளாளர், மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர், திண்டுக்கல் மேற்கு.

4. திரு. நத்தம் இரா. விசுவநாதன், M.L.A., அவர்கள் கழக துணைப் பொதுச் செயலாளர் | மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர், திண்டுக்கல் கிழக்கு.

5. திரு. C.பொன்னையன் அவர்கள், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர், கழக செய்தித் தொடர்பாளர், முன்னாள் அமைச்சர், திருவள்ளூர் வடக்கு.

6. டாக்டர் மு.தம்பிதுரை, M.P., அவர்கள் கழக கொள்கை பரப்புச் செயலாளர் முன்னாள் மத்திய அமைச்சர், திருப்பத்தூர்

7. திரு. செ. செம்மலை அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர், திருச்சி புறநகர் தெற்கு.

8. திருமதி பா. வளர்மதி அவர்கள் கழக மகளிர் அணிச் செயலாளர் கழக செய்தித் தொடர்பாளர் | முன்னாள் அமைச்சர், மதுரை மாநகர்

9. திருமதி S. கோகுல இந்திரா அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் கழக செய்தித் தொடர்பாளர் முன்னாள் அமைச்சர், திருச்சி பாநகர்.

10. திரு. கரூர் M. சின்னசாமி அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர்,கரூர்.

11. திரு.V. கருப்பசாமி பாண்டியன், Ex. M.L.A., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர், திருநெல்வேலி மாநகர்.

12. டாக்டர் பி. வேணுகோபால், Ex. M.P., அவர்கள் கழக மருத்துவ அணிச் செயலாளர், காஞ்சிபுரம்.

13. திரு.சேவூர் S. இராமச்சந்திரன், M.LA., அவர்கள், கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர், ராணிப்பேட்டை மேற்கு.

14. திரு. A.K. செல்வராஜ், M.L.A., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர், தேனி கிழக்கு.

15. திரு.V.S.சேதுராமன் அவர்கள் கழக வழக்கறிஞர் பிரிவுத் தலைவர், கோவை புறநகர் தெற்கு.

16. திரு. ஆர். கமலக்கண்ணன் அவர்கள் கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர், கடலூர் மேற்கு.

17. திரு. தாடி ம. இராசு அவர்கள் அண்ணா தொழிற்சங்கப் பேரவைத் தலைவர், திருச்சி புறநகர் வடக்கு.

18. திருமதி S. வளர்மதி அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர், தஞ்சாவூர் தெற்கு.

19. திரு.சுதா கே. பரமசிவன் அவர்கள் கழக அமைப்புச் செயலாளர், ராமநாதபுரம்.

20. திரு. S.R.விஜயகுமார், Ex. M.P., அவர்கள், கழக மாணவர் அணிச் செயலாளர், திருவள்ளூர் மேற்கு.

21. திரு.N.R. சிவபதி அவர்கள் கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர், முன்னாள் அமைச்சர், தஞ்சாவூர் மேற்கு.

22. திரு.T.K.M.சின்னையா அவர்கள், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர் முன்னாள் அமைச்சர்,திருவள்ளூர் கிழக்கு.

23. திரு. ப.மோகன் அவர்கள் கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர், பெரம்பலூர்.

24. திரு. முக்கூர் N. சுப்பிரமணியன் அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர்,வேலூர் மாநகர்.

25. திரு.செஞ்சி ந. ராமச்சந்திரன் அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் மத்திய அமைச்சர்,வேலூர் புறநகர்.

26. திரு. G.பாஸ்கரன் அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர், விருதுநகர் கிழக்கு.

27. திரு. அ. அன்வர்ராஜா, Ex. M.P., அவர்கள், கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர், தென்காசி தெற்கு.

28. திரு.சி.த. செல்லப்பாண்டியன் அவர்கள், கழக வர்த்தக அணிச் செயலாளர் முன்னாள் அமைச்சர், செங்கல்பட்டு மேற்கு.

29. திரு.செ.தாமோதரன், M.L.A., அவர்கள், கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர், திருப்பூர் மாநகர்.

30. திரு. T. ரத்தினவேல், Ex. M.P., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர், தஞ்சாவூர் மத்தியம்

31. திரு.M.S.M. ஆனந்தன், M.LA., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர், ஈரோடு புறநகர் கிழக்கு.

32. திரு.N. முருகுமாறன், Ex. M.L.A., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர், செங்கல்பட்டு கிழக்கு.

33. திரு. என். சின்னத்துரை அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளர், கன்னியாகுமரி மேற்கு

34. திரு.K.R. அர்ஜூனன், Ex. M.P., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர், திருப்பூர் புறநகர் மேற்கு

35. திரு. திருப்பூர் C. சிவசாமி, Ex. M.P., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர், ஈரோடு மாநகர்.

36. திரு.V. மருதராஜ் அவர்கள் கழக அமைப்புச் செயலாளர், திருப்பூர் புறநகர் கிழக்கு , திண்டுக்கல் மாநகராட்சி முன்னாள் மேயர்

37. திரு.P.G.ராஜேந்திரன், Ex. M.L.A., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர், தூத்துக்குடி தெற்கு

38. திரு. திருத்தணி கோ. அரி, Ex. M.P., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர், ராணிப்பேட்டை கிழக்கு

39. திரு. வாலாஜாபாத் பா. கணேசன், Ex. M.L.A., அவர்கள், கழக அமைப்புச் செயலாளர், திருவண்ணாமலை வடக்கு

40. திரு. S. ஆசைமணி, Ex. M.L.A., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர், அரியலூர்

41. திரு. A.K.சீனிவாசன் அவர்கள் கழக அமைப்புச் செயலாளர், சிவகங்கை

42. திரு.K. சிங்காரம், Ex. M.L.A., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர், கள்ளக்குறிச்சி

43. திரு.வரகூர் அ. அருணாசலம் அவர்கள் கழக அமைப்புச் செயலாளர், திருவண்ணாமலை மத்தியம், முன்னாள் அமைச்சர்

44. திரு.கா. சங்கரதாஸ் அவர்கள் கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர், சேலம் மாநகர்

45. டாக்டர் V.P.B. பரமசிவம், Ex. M.L.A.,அவர்கள், கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைச் செயலாளர், சேலம் புறநகர்,

46. திரு. R. மனோகரன் அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் அரசு தலைமை முன்னாள் கொறடா, தஞ்சாவூர் கிழக்கு.

47. திரு. V. ராமு அவர்கள் கழக அமைப்புச் செயலாளர், திருவண்ணாமலை கிழக்கு.

48. திரு. ராயபுரம் மனோ அவர்கள் கழக அமைப்புச் செயலாளர், கடலூர் கிழக்கு.

49. திரு. துரை, செந்தில் அவர்கள் கழக அமைப்புச் செயலாளர், திருவண்ணாமலை தெற்கு.

50. திரு. R. காந்தி அவர்கள் கழக அமைப்புச் செயலாளர், மதுரை புறநகர் கிழக்கு.

51. திரு I.S. இன்பதுரை, Ex. M.L.A.,அவர்கள் கழக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர், திருவள்ளூர் தெற்கு.

52. திரு. S. அப்துல் ரஹிம் அவர்கள் கழக சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர் முன்னாள் அமைச்சர், கடலூர் வடக்கு.

53. திரு. செ.ம. வேலுசாமி அவர்கள், கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர், முன்னாள் அமைச்சர், ஈரோடு புறநகர் மேற்கு.

54. திரு. பாஃபா பாண்டியராஜன் அவர்கள் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர், முன்னாள் அமைச்சர், தருமபுரி.

55. டாக்டர் V.சரோஜா அவர்கள், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் கழக மகளிர் அணி இணைச் செயலாளர் முன்னாள் அமைச்சர், தென் சென்னை தெற்கு (கிழக்கு).

56. திரு.K.A.ஜெயபால் அவர்கள் கழக மீனவர் பிரிவு இணைச் செயலாளர் முன்னாள் அமைச்சர், திருவள்ளூர் மத்தியம்.

57. டாக்டர் M. மணிகண்டன் அவர்கள் கழக மருத்துவ அணி துணைச் செயலாளர் முன்னாள் அமைச்சர், வட சென்னை வடக்கு (கிழக்கு).

58. திருமதி V.M. ராஜலெட்சுமி அவர்கள் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் கழக மகளிர் அணி துணைச் செயலாளர் முன்னாள் அமைச்சர், கன்னியாகுமரி கிழக்கு

59. திரு.பாப்புலர் V. முத்தையா அவர்கள் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர், தேனி மேற்கு.

60. திரு.S.சரவணபெருமாள் அவர்கள் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர், கடலூர் தெற்கு.

61. திரு. துரை திருஞானம் அவர்கள் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர், திரு. கோமல் R.K. அன்பரசன் அவர்கள் கழக M.G.R. இளைஞர் அணி இணைச் செயலாளர், மயிலாடுதுறை.

62. திரு.ஆ. இளவரசன், Ex. MP., அவர்கள் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர், திருவாரூர்.

63. திரு.R.M.பாபுமுருகவேல், Ex. M.L.A., அவர்கள், கழக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர், கழக செய்தித் தொடர்பாளர், நாகப்பட்டினம்.

64. திரு. காஞ்சி பன்னீர்செல்வம், Ex. M.L.A., அவர்கள் | அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர், தூத்துக்குடி வடக்கு.

65. திரு. தண்டரை K. மனோகரன், Ex. M.LA., அவர்கள் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர், மதுரை புறநகர் மேற்கு.

66. திரு. எம்.கே. செல்வராஜ், Ex. M.L.A., அவர்கள் (அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர், தென் சென்னை தெற்கு (மேற்கு).

67. திரு.K.A.K. முகில் அவர்கள் | கழக புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர், கோவை புறநகர் வடக்கு

68. டாக்டர் J. ஜெயவர்தன், Ex. M.P., அவர்கள் கழக புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர், கோவை மாநகர்.

69. திரு.N. சதன் பிரபாகர், Ex. M.L.A., அவர்கள் | கழக புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர், புதுக்கோட்டை வடக்கு

70. திரு.A.பிரபு, Ex. M.L.A., அவர்கள், கழக புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர், நாமக்கல்.

71. திரு.பொன். ராஜா, Ex. M.L.A., அவர்கள், கழக புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர், நீலகிரி.

72. திரு.S.D.S. செல்வம் அவர்கள், கழக புரட்சித் தலைவி பேரவை துணைச் செயலாளர், வட சென்னை வடக்கு (மேற்கு).

73. திரு.A.T.C. பொன்தனபாலன் அவர்கள், அண்ணா தொழிற்சங்கப் பேரவை துணைச் செயலாளர், தென்காசி வடக்கு.

74. திரு. E.பாலமுருகன் அவர்கள் கழக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர், விழுப்புரம்.

75. திரு. டி. ஜான் மகேந்திரன் அவர்கள், கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு பொருளாளர், முன்னாள் தலைவர், மாநில சிறுபான்மையினர் நல ஆணையம், விருதுநகர் மேற்கு.

76. திரு. கு. ராஜமாணிக்கம் அவர்கள் கழக விவசாயப் பிரிவு இணைச் செயலாளர், புதுக்கோட்டை தெற்கு.

77. டாக்டர் P. சரவணன், Ex. MLA., அவர்கள் கழக மருத்துவ அணி இணைச் செயலாளர், திருநெல்வேலி புறநகர்.

78. டாக்டர் K. காமராஜ், Ex. M.P., அவர்கள், கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர், வட சென்னை தெற்கு (கிழக்கு).

79. திரு. சிங்கை G. ராமச்சந்திரன் அவர்கள் கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர், வட சென்னை தெற்கு (மேற்கு).

80. திரு.C.T.R.நிர்மல்குமார் அவர்கள் கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு, இணைச் செயலாளர், தென் சென்னை வடக்கு (கிழக்கு).

81. திரு. T. பிரசாத் அவர்கள், கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர், சென்னை புறநகர்.

82. திரு.S.T.தர்மேஷ்குமார் அவர்கள் கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு பொருளாளர், தென் சென்னை வடக்கு (மேற்கு).

மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள், சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கு நேரில் சென்று, தொகுதி வாரியாக நடைபெற்று வரும் பணிகளை மேற்பார்வையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன், மாவட்டக் கழகச் செயலாளர்கள் இதற்கான முழு ஏற்பாடுகளையும் செய்திட வேண்டும். கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, பணியாற்றிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.