முதல்வரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து படையல் வைத்து ஈமச்சடங்கு செய்த அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள்.
தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக முதல்வர் சித்தாராமையாவிற்கு ஈமச் சடங்குகள் செய்த விவசாயிகள்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும்,
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டக்கூடாது
என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கடந்த 57 வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
57 ம் நாள் போராட்டமாக இன்று, காவிரியில் தண்ணீர் விட மறுக்கும் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா உருவ புகைப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து அவல்,
பொரி,
பலகாரங்கள், வாழைப்பழங்கள், அரிசி உள்ளிட்ட பொருட்களை படைத்து ஈமச்சடங்குகளை செய்து நூதன
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.