திருச்சியில் தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கம் சார்பில் மாநில பொதுக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்.
திருச்சியில் தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கம் சார்பில் மாநில பொது குழு கூட்டம்
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அருண் ஹோட்டலில் ஹோட்டலில் தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கம் சார்பாக மாநில பொது குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் சிவபிரகாசம் தலைமை தாங்கினார்.
பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ள கோரிக்கைகளின் சாராம்சங்கள் அரசுக்கு ஏற்கனவே சபர்ப்பித்த முக்கிய கோரிக்கை நிறைவேற்றியது, போக ஏணைய கோரிக்கைகள்
வனக்காப்பாளர், வனக்காவலர்களது ஊதிய உயர்வு முரண்பாடுகளை களையக்கோருதல், 1983ம் ஆண்டில் அரசால் அங்கீகாரம் பெறப்பட்ட தமிழ்நாடு வன. அலுவகத்தின் சட்ட வடிவமைதி (Byelaw), குழு அமைக்கப்பட்டு தற்காலத்திற்கேற்ப திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த திருத்தங்களை பொதுக்குழுவில் சமர்ப்பித்து உறுப்ளர்களின் கருத்துக்களை பெற்று சட்ட வடிவமைதியை இறுதி செய்து அரசுக்கு சமர்ப்பித்தல். மாநில தலைவர் எதிர்வரும் நவம்பர்-2023ஆம் மாதம் பணி ஓய்வு பெறுவதால். அதற்குள் மாவட்ட நிர்வாகிகள் தேர்தலை நடத்தி முடித்து மாநிலத் தலைவர் தேர்தலையும் நடத்த வேண்டியிருப்பதால், தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக முடிவெடுத்து, துறைக்கும் அரசுக்கும் தெரிவித்தல் .
அனைத்துப்பணி நிலைகளிலும் 30% புதிய பணியிடங்கள் புதிதாக உருவாக்குதல், அனைத்துப்பணி நிலைகளுக்கும் மாநில முதுநிலைப்பட்டியல் வெளியிடக்கோருதல்,
வனச்சீருடைப்பணியாளர்களுக்கு சீருடை, காலணி, டார்ச்லைட் உள்ளிட்டவைகளுக்கு ஒருங்கிணைந்தப் பணமாக ரூ.7000 வழங்கக்கோருதல். பல்வேறு கோட்டங்களில் பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிலுவையிலுள்ள மேற்படி படிகளை நிறுவையின்றி வழங்கிட கோருதல், வனச்சரக அலுவலர்களது பயன்பாட்டிலுள்ள ஈப்புகளுக்கு, பயன்படுத்தும் அளவிற்கு (As per actual)
எரிவொருள் வழங்கக்கோருதல்,
வனவர் மற்றும் வனக்காப்பாளர்களுக்கு இருசக்கர வாகனம் அதற்குண்டான எரிபொருள் வழங்கக்கோருதல்,
மகளிர் பணியாளர்களை மட்டுமே கொண்ட “நகர்ப்புற மகளிர் வனச்சரகங்கள்” முக்கிய நகரங்களில் ஏற்படுத்தக்கோருதல், தமிழ்நாடு வன சீருடை பணியாளர்கள் தேர்வு குழுமம் மூலம் தேர்வு செய்யப்படும் பணியிடங்களில் துறையில் பணியாற்றுபவர்களுக்கு 20% உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும். உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது.
மேலும் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.