திருச்சியில் புதிய தேசிய கட்சி தொடங்குவதற்கான முன்னோட்ட பத்திரிகையாளர் சந்திப்பு.
புதுக்கோட்டை
மாவட்டம் கீரனூர் பகுதியை சேர்ந்தவர் எம்.செந்தில். (வயது 42 )
இவர் ரெயில்வே சப்-காண்டிராக்டராக இருக்கிறார்
இந்த நிலையில் இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த செந்தில் ,
வருகிற மார்ச் 1ந் தேதி தேசிய அளவிலான புதிய கட்சியை தொடங்க இருப்பதாகவும், வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட இருப்பதாகவும்
அதிரடியாக தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும் போது,
என்னுடைய சிறுவயதில் இருந்தே மதிமுகவில் இணைந்து பணியாற்றி வந்தேன். வைகோ கலைஞருடன் கூட்டணி வைத்ததால் அக்கட்சியில் இருந்து விலகினேன்.
தமிழகத்தில் இன்று உள்ள நாம் தமிழர்,மக்கள் நீதி மையம் ஆகிய இரண்டு கட்சிகளை தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் குறிப்பாக அதிமுக , திமுக இரண்டு கட்சிகளும் ஊழல் நிறைந்த மக்களுக்கு எதிராக செயல்படும் கட்சிகள் ஆகும்.
எனது கட்சியின் பெண்களுக்கு கண்டிப்பாக 50 சதவீதம் இட ஒதுக்கீடு, மேலும் ஊழல் மற்றும் மதுவை ஒழிப்பது என் முதல் நோக்கமாகும்.
கட்சி தொடங்கிய ஆறு மாதத்தில் தேசிய அளவிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆறு மாதம் கெடு அளிப்போம்.
அந்த ஆறு மாதத்தில் எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் மோடியை ஆட்சியை விட்டு இறக்குவதற்கான பணியை மேற்கொள்வோம் என தெரிவித்தார்.
234 தொகுதிகளிலும் போட்டியிட்ட வேட்பாளர்கள் உள்ளனரா என கேட்டதற்கு வேட்பாளர்கள் தயாராக உள்ளனர் எனக் கூறினார்.