காட்டூரில் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்றது.
அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க,
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், அரியமங்கலம் பகுதிக்கு உட்பட்ட 38, 43,43A, ஆகிய பூத்களில் பூத் கமிட்டி அமைப்பதற்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் ப.குமார் தலைமையில்
பூத் கமிட்டி அமைத்தல், பூத் வாரியாக மகளிரணி, பூத் வாரியாக இளைஞர் – இளம்பெண்கள் பாசறை ஆகியவை அமைப்பது குறித்து கலந்தாய்வு கூட்டம் காட்டூரில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அரியமங்கலம் பகுதி கழகச் செயலாளர் தண்டபாணி, மாவட்ட கழக துணைச் செயலாளர் சுபத்திரா சுப்ரமணியன், பகுதி அவை தலைவர் கோவிந்தராஜ், பகுதி துணை செயலாளர் ராம் வெங்கடேஷ், வட்ட கழக செயலாளர் என்.எஸ்.பி. ரவிசங்கர். ஆர்.பி.ஜி.கணேசன், வெங்கடேஷ், காட்டூர்மணி மற்றும் கழக தொண்டர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.