திருச்சியில் முதல்வரின் உருவ பொம்மை எரித்த தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள். தடுக்காத காவல்துறையினர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் P அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி அண்ணாசிலை அருகில் கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டம் 17.09.2023ந் தேதி ஞாயிறுக்கிழமை இன்று காலை துவங்கினார்கள்.
46-ம் நாள் போராட்டமாக மத்திய அரசு இரண்டு மடங்கு இலாபகரமான விலை தருவதாக கூறிவிட்டு தரவில்லை, உச்ச நீதிமன்றம் கூறிய பிறகும் காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடவில்லை, கர்நாடகா-வில் தமிழக முதலமைச்சர் புகைப்படத்தை கிழிகிறார்கள், ஆனால் 46 நாட்களாக போராடும் நாங்கள் எதுவும் செய்ய கூடாது என்று தமிழக காவல்துறை மிரட்டுகிறார்கள், எனவே, காவிரியில் தண்ணீர் கொடுக்காமல் மத்திய அரசும், கர்நாடக அரசும் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கிறது என்று கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா உருவ பொம்மையை தீயிட்டு எரித்தனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஒருவர் மட்டுமே இருந்ததால் உருவ பொம்மை ஏரிப்பை தடுக்க முடியவில்லை.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
இந்த போராட்டத்தில் அரைநிர்வாணத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆண்டவர்,
சுப்பையா,
பெரியசாமி,
உத்தண்டன்,
மணியார்,
நாசம்மாள்,
பிரேம்குமார் மாநில செய்தித்தொடர்பாளர், சின்னராசு, தெய்வானை,
உமாரணி அரியலூர் மாவட்ட மகளிரணி தலைவர்
மற்றும்
சங்க நிர்வாகிகள், விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.