திருச்சி காவேரி மருத்துவமனை சார்பில் மாபெரும் மாரத்தான் போட்டி: அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
திருச்சி காவேரி மருத்துவமனை சார்பில் உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி திருச்சி உழவர் சந்தை அருகே இருந்து தொடங்கிய பல ஆயிரக்கணக் கானோர் கலந்து கொண்ட மாரத்தான் போட்டியை அமைச்சர் கே.என். நேரு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகராட்சி மேயர் அன்பழகன், ஆணையர் வைத்திநாதன், டாக்டர் மணிவண்ணன் செல்வராஜ், காவேரி மருத்துவமனை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர், செங்குட்டுவன், காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குனர், செந்தில்குமார் , மண்டல தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்காதேவி, கவுன்சிலர்கள் காஜாமலை விஜய், விஜயா ஜெயராஜ், புஷ்பராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.