பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி. திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
இன்று வெளியான அதிமுக பொதுக்குழு குறித்த வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பை கொண்டாடும் வகையில் இன்று திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில்
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். நிகழ்வில் மாவட்ட கழக அவைத்தலைவர் M.அருணகிரி, பகுதி கழக செயலாளர் A.தண்டபாணி, M.பாலசுப்ரமணியன், பொதுக்குழு உறுப்பினர் P.சாந்தி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் T.M. முருகன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர்கள் அணி செயலாளர் K.S.பாஸ்கர், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் M.சுரேஷ்குமார், மற்றும் மாமன்ற உறுப்பினர் கோ.கு.அம்பிகாபதி, மற்றும் கழக முன்னோடிகள் ஜே.பாலமூர்த்தி, லால்குடி Ex.ஒன்றியம் குணசீலன், P.கணபதி,
வட்ட கழக செயலாளர்கள் தெய்வமணிகண்டன், K.P.சங்கர், ஆபிரகாம், மற்றும் மாவட்ட கழக, ஒன்றிய கழக பேரூர், பகுதி கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.