நாளை திருச்சி வரும் தமிழக முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொண்டர்களுக்கு அழைப்பு.
நாளை திருச்சி வருகை தரும் தமிழக முதல்வருக்கு சிறப்பான
வரவேற்பு அளிக்க வேண்டி பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் மகேஷ் பெய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
டெல்டா மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாளை 24/08/2023 வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தரும் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை வரவேற்க அனைத்து நிர்வாகிகளும் தவறாமல் விமான நிலையத்திற்கு வரும்படி அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.
இந்த நிகழ்வில் மாவட்ட, மாநகர, மாநில நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர,பேரூர், கிளை, வட்ட, வார்டு செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழக முன்னோடிகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.