

மதுரையில் நாளை நடைபெற உள்ள அதிமுகவின் பிரம்மாண்ட எழுச்சி மாநாடு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற உள்ளது.
தமிழக மட்டுமில்லாமல் தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இம் மாநாட்டிற்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் கடந்த 15 நாட்களாக திருச்சி மாவட்டம் முழுவதும் எழுச்சி மாநாடு குறித்த மிகப் பிரமாண்டமான பிரச்சார வாகனம் எடத்தெருவை சேர்ந்த எம்.கே. குமார் ஏற்பாட்டில் சுற்றி வருவது திருச்சி மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
அதிமுகவில் எந்த பொறுப்பிலும் இல்லாவிட்டாலும் எடப்பாடி பழனிச்சாமி மீது உள்ள தீவிர விசுவாசத்தின் காரணமாக இந்த பிரச்சார வாகனத்தை குமார் ஏற்பாடு செய்துள்ளார்.

