திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்கோயில் இணை ஆணையராக செ.மாரிமுத்து பொறுப்பேற்பு
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் இணை ஆணையராக கடந்த 7 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வந்த பொன்.ஜெயராமன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பதவி உயர்வுடன் பணியிடம் மாற்றப்பட்டார். இவர் பணியிடமாறுதலை அடுத்து திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் இணை ஆணையர் அசோக்குமார் கூடுதல் பொறுப்பாக ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையராக செயல்பட்டு வந்தார்.
இந்தநிலையில், வேலூரில் இந்து சமய அறநிலையத்துறையில் இணை ஆணையராக பணியாற்றிய வந்த செ.மாரிமுத்து, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்கோயில் இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து நேற்று பிப்ரவரி 4-ம் தேதி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்கோயிலில் இணை ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு ஸ்ரீரங்கம் கோயில் அறங்காவலர்கள், கோயில் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.