Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

போலீசார் விருப்பம் போல் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். திருச்சி போலீஸ் கமிஷனர் பேட்டி.

0

'- Advertisement -

 

போலீசார் விருப்பம் போல் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்.
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்திய பிரியா பேட்டி.

திருச்சி கே.கே.நகரில் உள்ள மாநகர காவல் துறை சமுதாய கூடத்தில் காவல்துறை மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனை முகாம் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் இன்று நடைபெற்றது.

முகாமை மாநகர காவல்துறை ஆணையர் சத்தியபிரியா தொடங்கி வைத்தார். முகாம் இன்று (13ஆம் தேதி) முதல் 18ஆம் தேதி வரை நடைபெறும் .

இந்த பரிசோதனை முகாமில் டிஜிட்டல் எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், இதய அழுத்த சோதனை, ஆடியோ மெட்ரிக், எக்கோ,
இசிஜி அடிப்படை பரிசோதனை, ரத்த மாதிரி சேகரிப்பு போன்ற உடல் பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்நிகழ்வில் அப்போலோ மருத்துவ குழுமத்தின் மதுரை மண்டல தலைமை செயல் அதிகாரி நீலக்கண்ணன், மருத்துவர் சிவம், மார்க்கெட்டிங் மேலாளர் அனந்த ராமகிருஷ்ணன், ஜி.எம்.
ஆப்ரேஷன் சங்கீத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு காவல் துறை ஆணையர் சத்தியபிரியா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு மன உளைச்சலை குறைப்பதற்காக வாரம் ஒரு முறை யோகா பயிற்சி வழங்கப்பட உள்ளது. மேலும் முதலில் அவர்கள் உடல் நலம் முக்கியம் ஆகையால் முதல் கட்டமாக இலவச மருத்துவ பரிசோதனை முகாமை ஏற்பாடு செய்துள்ளோம். காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் விருப்பம் போல் விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம் அவர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு வருகிறது.

காவலருக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை என வரும் தகவல் பொய்யானது.
இவ்வாறு அவர் கூறினார் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.