திருச்சியில் ஆப்பிள் மில்லட் உரிமையாளர் வீர சக்தி வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேக்ஸ் நிறுவன பங்குதாரரும், திருச்சி தில்லை நகர் ஆப்பிள் மில்லட் உரிமையாளருமான வீர சக்தி வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிட்டவர் வீர சக்தி என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் கரூர் சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்தி வீட்டிலும், வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் நடைபெற்ற சமயத்தில் ‘ இவரது வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.10 கோடி ரூபாயை வருமான வரி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் நடைபெற்ற வருமான வரி சோதனையின் போது இவரது வீடு சீல் வைக்கப்பட்டது. அந்த சீலை தற்போது அகற்றிய வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.