திருச்சியில் நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இன்று திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீ ராகவேந்தர் கோவிலில் நடிகர் விஜய் பெயரில் அர்ச்சனையும் அபிஷேகமும் செய்யப்பட்டது.
ஸ்ரீ ராகவேந்தர் கோவிலில் வெள்ளி தேர் இழுத்து வழிபாடு செய்யப்பட்டது இந்நிகழ்ச்சியை திருச்சி மாவட்ட முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.கே. ராஜா தலைமையில் நடைபெற்றது.
மேலும் மண்ணச்சநல்லூர் சுரேஷ் சார்பில் திருவாசி அரசினர் ஆதிதிராவிட நடுநிலைப்பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகளும் 150 மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் ஜீவா, லால்குடி கலைவாணன், உறையூர் சரண்ராஜ், லால்குடி லோகநாதன், தொட்டியம் பாரதிராஜா, ஸ்ரீரங்கம் பார்த்திபன், ஸ்ரீரங்கம் சங்கர், தொட்டியம் பிரபாகரன், சமயபுரம் அஸ்வின், மலைக்கோட்டை நசீர், சிலையாத்தி மணிகண்டன், செங்கிலி பட்டி மாரி, மண்ணச்சநல்லூர் கலைவாணன், திருவாசி சுந்தர், சூர்யா, கிளியநல்லூர் முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.