திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யோகா விழிப்புணர்வு பயிற்சி.
தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யூத் ரெட் கிராஸ், நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் யோகா மையம் இணைந்து நடத்திய யோகா விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.
இந்த பயிற்சிக்கு கல்லூரி முதல்வர் பு சு விஜயலட்சுமி தலைமை தாங்கினார், யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலரும் திருச்சிராப்பள்ளி மாவட்ட யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் இரா.குணசேகரன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் சு. பாலமுருகனும் வாழ்த்துரை வழங்கினர்.
கே கே நகர் மனவளக் கலை அறக்கட்டளை மன்ற யோகா பேராசிரியர் இரா. சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு யோகா செய்வதால் மனித குலம் அடையும் நன்மைகளை விளக்கி சிறப்புரையாற்றினார் .
அதன் பிறகு 300 மாணவ-மாணவியர்க்கு யோகா பயிற்சியளிக்கப் பட்டது.
முன்னதாக வரலாற்றுத் துறை பேராசிரியரும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலருமான முனைவர் வீ. கல்பனாதேவி வரவேற்புரை ஆற்றினார், ஆங்கிலத் துறை பேராசிரியரும் யோகா மைய ஒருங்கிணைப்பாளருமான முனைவர் நா .பார்வதி நன்றி கூறினார். நிகழ்வில் பேராசிரியர்களும் அலுவலகப் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.