அண்ணாவின் 52 வது நினைவு நாளை முன்னிட்டு மணப்பாறையில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் மவுன ஊர்வலம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் பவுன் ராமமூர்த்தி, முன்னாள் எம்எல்ஏ சின்னசாமி, ஒன்றிய செயலாளர்கள் வெங்கடாசலம், சேது, பழனிச்சாமி, பொன்னுசாமி, திருமலை சாமிநாதன்,
மாவட்ட நிர்வாகிகள் ராஜ்மோகன், நாட்ஸ் இளங்கோ, ஸ்ரீதர் ராவ், மீனவர் அணி பொன்னுசாமி, வழக்கறிஞர் முருகன், மற்றும் நிர்வாகிகள், அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.