திருச்சி இக்பால் காலனியில் விக்னேஷ் எம்பிரர் நவீன உடற்பயிற்சி கூடத்தை மிஸ்டர் வேர்ல்ட் ஜெயபிரகாஷ் (ஐசிஎப்) மற்றும் மிஸ்டர் இந்தியா ராகவேந்திரா (சதர்ன் ரயில்வே) ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் உடற்பயிற்சி கூட உரிமையாளர் விக்னேஸ்வரன்,
மற்றும் அவரது தந்தை ராமகிருஷ்ணன், தாயார் பரமேஸ்வரி, சகோதரர் விஜய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திறப்பு விழா நிகழ்ச்சிக்கு பின் உரிமையாளர் விக்னேஸ்வரன் கூறுகையில் இந்த உடற்பயிற்சி கூடத்தில் திறமையான பயிற்சி பெற்ற பயிற்றுநர்களால் ஆண் பெண் இருபாலரும் தனித்தனியாக பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும் உடல் எடையை குறைக்கவும் தனியாக நவீன பயிற்சி அளிக்கப்படும் என கூறினார்.