திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமையில் நடைபெற்றது.
திருவரங்கத்தில் 29-ந்தேதி ஆர்ப்பாட்டம் :

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் இன்று நடைபெற்றது,
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி தலைமையில் மாவட்ட கழக அலுவலகத்தில் இன்று ( வியாழக்கிழமை) காலை 10.30மணிக்கு நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திமுக அரசை கண்டித்து 29-ந் தேதி அன்று காலை 10மணி அளவில் திருவரங்கத்தில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் வளர்மதி, கழக எம்ஜிஆர் இளைஞரணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சிவபதி, மாவட்ட அவைத் தலைவர் பிரின்ஸ் தங்கவேல், முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன், மாவட்ட இணை செயலாளர் இந்திராகாந்தி, கழக எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர் பொன்.செல்வராஜ்,மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மு.பரமேஸ்வரி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல இணைச் செயலாளர் திருநாவுக்கரசு, மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் ஜி.ரமேஷ், பாஸ்கரன், ஏவூர் நாகராஜன், அன்பு பிரபாகரன், பேரூர் கண்ணதாசன், நகர கழக செயலாளர் சுப்ரமணியன், அமைதி பாலு, ஒன்றிய செயலாளர்கள் ஆதாளி, ராஜமாணிக்கம், சேனை செல்வம், முத்துக்கருப்பன், ஜெயக்குமார், நடராஜன், பிரகாஷவேல், ஆமூர் ஜெயராமன், பால்மணி, ஜெயம், ராம் மோகன், வெங்கடேசன், ஜெயக்குமார், அழகாபுரி செல்வராஜ், கடிகை ராஜகோபால், பேரூராட்சி கழக செயலாளர்கள் ராமச்சந்திரன், சம்பத்குமார், திருஞானம் பிள்ளை, ராஜாங்கம், ராஜேந்திரன், பகுதி கழக செயலாளர் டைமண்ட் திருப்பதி, சுந்தர்ராஜன், வட்ட செயலாளர்கள் மனோகர், கலைமணி, பொன்னர், கொளஞ்சி, சேகர், ராஜு, பிரகாஷ், செந்தில், செல்வம் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது, 29.ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் திரளாக கலந்து கொள்வதுஉள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.