பிஎஸ்என்எல் எம்பிளாயீஸ் யூனியன் சார்பில் திருச்சி கண்ட்டோன்மென்ட் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் 8அம்ச கோரிக்கைகளை. வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் ஒப்பந்த ஊழியர்களுக்கு நீதிமன்ற தீர்ப்புப்படி வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளை திருப்பி வழங்கிட வேண்டும்,
பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் மீண்டும் பணியமர்த்த வேண்டும், பொது மேலாளர் அலுவலகத்தில் லிப்ட் வசதி, மன்னார்புரம் பகுதியில் உள்ள ஊழியர்கள் குடியிருப்பில் தண்ணீர் வசதி, அலுவலகத்திற்கு வரக்கூடிய பொதுமக்களுக்கான குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள், உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் பல்வேறு சமூகங்களை சேர்ந்த மாவட்ட தலைவர்கள் முருகேசன், ஜான் பாஷா, சுந்தர்ராஜ்.மாவட்ட செயலாளர்கள் சின்னையன்,முபாரக் அலி, சுந்தர்ராஜ் மாவட்ட பொருளாளர்கள் சண்முகம், அன்பழகன், கோபி மற்றும் நிர்வாகிகள் தலைமையில் ஏராளமான ஊழியர்கள் இந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.