தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியளர்களாக்க வேண்டும். முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
அகவிலைப்படியுடன் கூடிய முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும்போது ஊழியர்களுக்கு ரூ 10 லட்சம் உதவியாளருக்கு ரூ 5 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு
மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வி
தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, சங்க மாவட்ட செயலாளர் சித்ரா மாவட்ட பொருளாளர் ராணி ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
இதில் சங்க நிர்வாகிகள் கலைவாணி, கஸ்தூரி, திலகம், ரஹமத்பானு, அலமேலு உள்பட அங்கன்வாடி ஊழியர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.