.
திருச்சி அருகே காவல் நிலையம் முன்பு
தீக்குளித்த சிறைக் காவலர் உயிரிழப்பு.
லால்குடி காவல் உதவி ஆய்வாளர் பணி இடைநீக்கம்
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், செம்பக்கரை கிராமத்தை சேர்ந்தவர்
மணி.
இவருக்கு நிர்மல் (வயது 45) ராஜா (வயது 43)
என இரு மகன்கள் உள்ளனர்.
இதில் ராஜா லால்குடி கிளைச்சிறையில் சிறைகாவலராக பணியாற்றி வந்துள்ளார்.
இவரது தம்பியான நிர்மல் காவலராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில்
மணி தனது பெயரில் உள்ள வீட்டை மகன்கள் இருவருக்கும் பாகம் பிரித்துக் கொடுத்துள்ளார்.
இதில் ராஜாவுக்கு சற்று குறைவாகவும், நிர்மலுக்கு சற்று கூடுதலாகவும் பாகம் பிரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக இரு தரப்பினர் இடையே அடிக்கடி தகராறு எழுந்து வந்துள்ளது.
இந்த சூழலில் அடிதடி வழக்கொன்றில் ராஜா குற்றவாளியாக சேர்க்கப்பட்டதால் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே
இந்த சொத்து பிரச்சனை தொடர்பாக அண்மையில் இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து,
ராஜா, நேற்று
லால்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்தபோது காவல் உதவி
ஆய்வாளர் பொற்செழியன் சரிவர விசாரணை செய்யவில்லையாம்.
இதனால்
விரக்தி அடைந்த சிறைக்காவலர் ராஜா காவல் நிலையம் எதிரே தான் கையோடு கொண்டு பெட்ரோலை தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார்.
உடல் முழுவதும் காயமடைந்த ராஜா திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை இறந்து விட்டார்.
உரிய விசாரணை மேற்கொள்ளாத காவல் உதவி ஆய்வாளர் பொற் செழியன் திருச்சி சரக டி.ஐ.ஜி.சரவண சுந்தர் உத்தரவின் பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.