திருச்சி கேர் பொறியியல் கல்லூரியின் 14ம் ஆண்டு விழா நடைபெற்றது.
கேர் கல்வி குழும தலைமை நிர்வாக இயக்குனர் பிரதீவ் சந்த் விழாவிற்கு தலைமை தாங்கினார்.
மேலும் கல்வியாளர் ,நிகழ்ச்சி தொகுப்பாளர் ஈரோடு மகேஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு ஊக்கம் மற்றும் வகையில் சிறப்புரை ஆற்றினார்.அவர் கூறியதாவது:-
உண்மையான வாழ்க்கை உங்கள் கல்லூரி கல்விக்குப் பிறகு தொடங்குகிறது.வாழ்க்கை வெற்றி பெற நீங்கள் தொடர்ந்து கற்றுக் கொள்ள வேண்டும்.கனவுகளை உருவாக்குங்கள்.
வருங்காலம் நிகழ்ச்சி தேர்வுகள் சார்ந்துள்ளது.நாளைய சமுதாயம் மாணவர்கள் கையில் தான் உள்ளது.உங்கள் தோல்விகளை அனுபவியுங்கள் ஏனெனில் ஒவ்வொரு தோல்வியும் உங்களை வெற்றியை நோக்கி அழைத்து செல்கிறது.
பின்னர் கல்வி சாதனைகள், விளையாட்டு சாதனைகள், வெளியேறும் மிகச் சிறந்த மாணவன், சிறந்த ஆசிரியர், மற்றும் சிறந்த துறை பரிசுகளை வழங்கினார்.
பொறியியல் கல்லூரி முதல்வர் சாந்தி 2022-23 ஆண்டறிக்கையை வாசித்தார்.
விழாவில் துறை தலைவர்கள்,பேராசிரியர்கள்.உதவி பேராசிரியர்கள்,
கல்லூரி ஊழியர்கள்
மாணவர்கள், பெற்றோர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.