திருச்சி காட்டூர் பகுதி திமுக சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நலத்திட்டங்கள் வழங்கி சிறப்புரை.
திருச்சி காட்டூர் பகுதி திமுக சார்பில் தமிழக முதல்வர்
மு.க.ஸ்டாலின் 70வது பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா காட்டூரில் நடந்தது.
விழாவிற்கு காட்டூர் பகுதி செயலாளர் நீலமேகம் தலைமை தலைமை வகித்தார்.
கட்சி நிர்வாகிகள் சுரேஷ், ஆனந்த், விஸ்வநாதன், முருகானந்தம், சிவசக்தி கார்த்திக் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:
உங்களின் ஒருவனாக உழைக்கும் தமிழக முதல்வருக்கு தான் இந்த பிறந்தநாள் மாநில உரிமையை காப்பதுடன் மக்களின் உரிமையை காப்பதற்கு ஸ்டாலின் முன்நிற்பார்.
இன்று அண்ணல் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் விழா இதில் நாங்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டதோடு அவரது உருவ சிலைக்கு மாலை அணிந்து மரியாதை செய்தோம் அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது மட்டும் அல்ல அவருடைய கொள்கைகளை நாங்கள் கடைபிடிப்பதோடு சமூகநீதி கொள்கையை பின்பற்றும் கட்சியாக நாங்கள் உள்ளோம்.
தேர்தலின் போது தமிழக முதல்வர் கொடுத்த 505 வாக்கு உறுதிகளின் 85 சதவீதத்தை நிறைவேற்றி உள்ளதாகவும் இன்னும் 3 ஆண்டுகள் இருக்கு என்று காரணம் காட்டாமல் அதனை எவ்வளவு விரைவில் செய்ய முடியுமோ செய்வதோடு மட்டுமல்லாமல் கூடுதலாக மக்களுக்கு என்ன தேவை என்பதை பொறுத்து செய்வோம்.என்று சட்டமன்றத்திலேயே முதல்வர் கூறியுள்ளார். எனவே அவரது கரத்தை நாம் வலுப்படுத்த வேண்டும்.
தமிழக முதல்வரின் பிறந்தநாள் மட்டுமல்லாமல் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி வருகின்றோம். கடந்த பிறந்தநாள் நான் முதல்வன் திட்டத்தை கொண்டு வந்தார்.
தற்போதைய பிறந்தநாளில் ஏழு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அதில் கல்விக்கு முக்கியத்துவம், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு பிரச்சனைகளை போக்க வேண்டும், அனைத்து பள்ளிகளிலும் மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி, திருநங்கைகளின் உதவித்தொகை
1500 ஆக உயர்த்தி கொடுத்தது, அரசு பணியாளர்களுக்கு அரசு ஆணை வழங்கியது, 1131 கோடி மதிப்பீட்டில் 44 மருத்துவமனை நிறந்தது,
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டம், சென்னையில் தூய்மை பணியாளர்கள் நவீன இயந்திரம் மூலம் சுத்தம் செய்ய வைத்ததோடு அதில் அவர்களையும் ஒரு தொழில் முனைவராக கொண்டு வந்தது ஆகியவை ஆகும்
முதல்வர் தனது பிறந்த நாளை மக்கள் பணிக்கு அர்ப்பணித்துள்ளார் இந்த காட்டூர் என்ற பெயர் கலைஞர் தாயின் அஞ்சு கம்மாள் உறங்கும் இடம் காட்டூர்,
இந்த காட்டூர் திமுகவின் கோட்டை அதற்கு நன்றியை பட்டவர்களாக இருப்பதோடு பாராட்டுவதாகவும் காட்டூர் பகுதியில்
3 ரேஷன் கடைகள் மட்டுமல்லாமல், சாலை, மழை நீர் வடிகால், ஆரம்ப சுகாதார நிலையம் என ரூ 7 கோடியே 23 லட்சத்தையும் 14 ஆயிரம் மதிப்பீட்டில் பணிகள் முடிந்து உள்ளது.
மேலும் எரிவாயு தகனமேடை, சாலை,
குளம்தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளுக்கு 11 கோடியை 50 லட்சம் மதிப்பில் பணிகள் நடந்து வருவதாகவும் மொத்தம் காட்டூருக்கு மட்டுமே 18 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்னும் நாங்கள் அதிகமான பணிகளை செய்ய உள்ளோம்
மேலும் மக்களிடமிருந்து பெறக்கூடிய மனுக்கள் வெரும் பேப்பர்கள் அல்ல அது அவர்களின் தலையெழுத்து என்பதை உணர்ந்து செயல்படுங்கள் என எங்களுக்கு தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
நீங்கள் சொல்லும் கட்டளையை நிறைவேற்ற வேண்டிய இடத்தில் நாங்கள் உள்ளோம்.
விமர்சனத்திற்கு பதில் சொல்ல வேண்டியதில்லை இந்த நாளை மக்களுக்க உழைக்கும் நாளாக உறுதி ஏற்கும் நாளாக எண்ணுகிறோம் என்றார்
இந்த விழாவில் மாநில சுற்றுச்சூழல் அணியை செயலாளர் கார்த்திகேய சிவ சேனாதிபதி, மாநகர செயலாளர் மதிவாணன், இளமை செயற்குழு உறுப்பினர் சேகரன், திருச்சி மாநகர துணை மேயர் திவ்யா, செங்குட்டுவன் பகுதி செயலாளர்கள் தர்மராஜ், சிவக்குமார், ஒன்றிய கழகச் செயலாளர்கள் கங்காதரன் நகரக் கழகச் செயலாளர் காயம்பு உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்
முன்னதாக 38வது வார்டு செயலாளர் தமிழ்மணி வரவேற்றார்.
38வது வார்டு செயலாளர் மன்சூரலி நன்றி கூறினார்.