முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு.
திருச்சி காட்டூர் அர்ரஹ்மான் பள்ளிவாசலில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் தலைமையில் நடந்தது.
நோன்பு திறப்பு நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மேலும் மாநகர தி.மு.க. செயலாளரும், மாநகராட்சி கோட்ட தலைவருமான மதிவாணன், பகுதி செயலாளர் நீலமேகம், கவுன்சிலர் தாஜுதீன்,
பள்ளிவாசல் செயலாளர் ஹைதர் அலி, தலைவர் சையது உஸ்மான், முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழக மாநில மாணவர் அணி தலைவர் ஆரிபுல்லா, இளைஞர் அணி முகமது முஸ்தபா, செஞ்சி முகமது காசிம், மஜீத்,சாதிக் முகமது, ஜாகிர் உசேன்,தர்கா சாதிக்கான், ஜமால் மைதீன் மற்றும் ஏராளமான கலந்து கொண்டனர்.