திருச்சி மாவட்ட பள்ளிகளுக்கு இடையேயான கிட்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி.ஆர்.எஸ்.கே.பள்ளி முதல் இடத்தை பிடித்தது.

6வது பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட கிட்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி 24 மற்றும் 25 தேதிகளில் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இப்போட்டிக்கு சிறப்பு விருந்தினராக தெற்கு ரயில்வே, சர்வதேச தடகள வீரர் முத்துசாமி, திருச்சி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் எஸ்.சரோஜினி, திருச்சி ஜென்னி உடற்கல்வி கல்லூரி முதல்வர் எஸ். அருள்ஜோஹி, VDart Group AGM Operation Derrick Alex இயக்குனர் – திருச்சி கிட்ஸ் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன். டாக்டர் சாமுவேல் பால் தேவகுமார் – தலைவர், மனோஜ் – குழந்தைகள் விளையாட்டு சங்கத்தின் அமைப்பு செயலாளர். ஆர்.கருணாகரன் திருச்சி மாவட்ட கிட்டீஸ் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இப்போட்டியில் VDART ஒட்டுமொத்த டிராபி கோப்பையை திருச்சி கைலாசபுரம் ஆர்எஸ்கே மேல்நிலைப்பள்ளி 190 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து கைப்பற்றியது.
இதில் சிறுவர்கள் பிரிவில் முதலிடத்தை திருச்சி கைலாசபுரம் ஆர்எஸ்கே மேல்நிலைப்பள்ளி 86 புள்ளிகளுடனும், ரன்னர்-அப் – பாய்லர் பிளாண்ட் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி – 78 புள்ளிகளுடனும்,
பெண்கள் பிரிவில் முதலிடத்தை ஆர்எஸ்கே மேல்நிலைப்பள்ளி , கைலாஸ்புரம், 104 புள்ளிகளுடனும் ரன்னர்-அப் – பாய்லர் பிளாண்ட் நர்சரி மற்றும் பிரைமரி 37 – புள்ளிகளுடனும் இரண்டாவது இடத்தை பிடித்தனர்.
மேற்கண்ட விருந்தினர்கள் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வழங்கினார்கள்.

