Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் அரசு கல்லூரி ஆசிரியர் மன்றத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

0

'- Advertisement -

 

திருச்சியில் அரசு கல்லூரி ஆசிரியர் மன்றத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

அரசு கல்லூரி ஆசிரியர் மன்றத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

இதில் மன்றத்தின் தலைவர் சிவராமன், பொது செயலாளர் குமார், பொருளாளர் ஜெய முருகன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிதி நிலையை காரணம் காட்டி நிறுத்தி வைத்துள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சரன்டரை உடனே வழங்க வேண்டும், அரசு கல்லூரியில் ugc பரிந்துரைக்கேற்ப பேராசிரியர் பதவியினை தோற்றுவிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், கல்வியியல் கல்லூரிகள் உள்பட 163 அரசு கல்லூரிகளில் 8000 க்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன, இதனால் மாணாக்கர்களின் கல்வி நலன் பாதிக்கப்படும் சூழல் எழுந்துள்ளது. ஆகவே மாணாக்கர் நலனை கருத்தில் கொண்டு ஆசிரியர் பணியிடங்களை உரிய வகையில் விரைந்து நிரப்பி உயர் கல்வியை மேம்படுத்திட தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.