உலக காச நோய் தினத்தை முன்னிட்டு மணிகண்டம் வட்டம் சோமரசம்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட தாயனூர் நல வாழ்வு மையத்தில் உலக காசநோய் தினம் அனுசரிக்கப்பட்டது
.விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது.இதில் திருச்சிராப்பள்ளி மாவட்ட காசநோய் தடுப்பு மையத்திலிருந்து மரு. சாவித்திரி துணை இயக்குனர் ,(காசநாய்) தலைமையில் தேசிய காசநோய் விழிப்புணர்வு மின் இயந்திர சுற்று விழிப்புணர்வு தகவல் பலகை துவக்கி வைத்தார்.
பின்னர் தாயனூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் மூலம் காசநோய் பற்றிய விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தினர். மணிகண்டன் வட்டார மருத்துவர் மரு. தனலட்சுமி, சோமரசம்பேட்டை மருத்துவ அலுவலர் மரு. அமிர்தா மணிகண்ட வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சோமரசம்பேட்டை சுகாதார ஆய்வாளர், தாயனூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத் தலைவர், பொது சுகாதார பணியாளர்கள், தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட களப்பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சினை திறன் பட ஒருங்கிணைத்து செயல்படுத்தியவர் சோமரசம்பேட்டை சுகாதார பார்வையாளர் மேரி கலா. நிகழ்ச்சிக்கு மின் சுற்று விழிப்புணர்வு தகவல் பலகையை அளித்தவர் சோமரசம்பேட்டை முன்னாள் மருந்தாளர் சித்ரா மற்றும் அவர்களது குடும்பத்தினர். இந்நிகழ்ச்சியை உறுதுணையாக தாயனூர் நலவாழ்வு மைய இடைநிலை சுகாதாரப் பணியாளர் சங்கவி . இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
மேலும் காச நோய் துணை இயக்குனர் மக்களுக்கு காச நோய் பற்றிய விளக்கங்களை வழங்கினார்.மேலும் பெண் குழந்தைகள் காச நோய் குறித்த விழிப்புணர்வு நடனம் ,மற்றும் அமைதி நாடகம் நடத்தி மக்களுக்கு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி வழங்கினர்.
மேலும் மக்கள், மற்றும் சுகாதார துறை பணியாளர்கள் பஞ்சாயத்து தலைவர்கள் காசநோய் ஒழிப்பு உறுதி மொழி மேற்கொண்டனர்.