
திருச்சி சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவர், கோவா சென்றுவிட்டு கடந்த 3 நாட்களுக்கு முன் மீண்டும் திருச்சிக்கு வந்தார்.
அதிலிருந்து தொடர் காய்ச்சல் மற்றும் தலைவலியால் அவதிப்பட்டு வந்த அவரை திருவானைக்காவல் பகுதியில் உள்ள கி.ஆ.பெ. ரிவர் யூ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு கொரோனா நோய் தொற்றுக்கான
சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார்.
இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திற்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மாநகராட்சி நிர்வாகத்தினர் அந்த வாலிபரின் உடலை அடக்கம் செய்தனர் .

