பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் சார்பில் பான் செக்கர்ஸ் பெண்கள் கல்லூரியில் மாபெரும் ரத்ததான முகாம்.
தஞ்சை பான் செக்கர்ஸ் பெண்கள் கல்லூரியில் இரத்ததான முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் துவக்கி வைத்தார்.
பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் வழிகாட்டுதலின் படி, தஞ்சை பான் செக்கர்ஸ் பெண்கள் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாம் இன்று நடைபெற்றது.
இந்த முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர். வெற்றிவேல் அவர்கள் தலைமையேற்று இரத்ததான முகாமை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் தஞ்சை மாவட்ட யூத் ரெட் கிராஸ் அமைப்பாளரும் திருக்காட்டுப்பள்ளி அரசு கலைக் கல்லூரியின் உதவி பேராசிரியருமான முருகானந்தம், பான் செக்கர்ஸ் கல்லூரியின் இயக்குனர் டெரன்சியா மேரி, முதல்வர் முனைவர். காயத்ரி இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் தஞ்சை மாவட்ட தலைவர் மருத்துவர். வரதராஜன், மேலாண்மை குழு உறுப்பினர் ஜெயக்குமார், தஞ்சை மிராசுதார் மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் காயத்ரி, பான் செக்கர்ஸ் பெண்கள் கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் வித்யா மற்றும் பான் செக்கர்ஸ் பெண்கள் கல்லூரியின் பேராசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.
இந்த மாபெரும் இரத்ததான முகாமில் பான் செக்கர்ஸ் பெண்கள் கல்லூரியின் 80 மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் இரத்ததானம் செய்தனர்.