திருச்சி ரஞ்சிதபுரத்தில் புதிய பேருந்து நிறுத்தம் திறப்பு.தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய 48 வது வார்டு கவுன்சிலர் தர்மராஜுக்கு குவியும் பாராட்டு.
திருச்சி 48வது வார்டில் ரஞ்சிதபுரம் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை என்பதை தனது தேர்தல் வாக்குறுதியின் போது ரஞ்சிதபுரம் பொதுமக்களின் (பாண்டியன் தெரு, கென்னடி தெரு, வள்ளுவர் தெரு, கணபதி தெரு, ரங்கநகர்,இளங்கோ தெரு, பன்னீர்செல்வம் தெரு, ஜீவா நகர் போன்ற தெருக்களிவல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தும் பேருந்து நிறுத்தம்) நெடுநாளைய தேவையை பூர்த்தி செய்வேன் என கூறியிருந்தார் அதனை இன்று நிறைவேற்றியுள்ளார் கவுன்சிலர் கொட்டப்பட்டு தர்மராஜ்.
இன்று திருச்சி சுப்ரமணியபுரம் ரஞ்சிதபுரத்தில் திருச்சி கிழக்குத் தொகுதி எம்எல்ஏவின் நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடையை எம்எல்ஏ திறந்து வைத்தார்.
திறப்பு விழாவை யொட்டி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் துணைச் செயலாளர் ஜெகதாம்பாள், வட்டச் செயலாளர்கள் நாகவேணி மாரிமுத்து, மனோகர், ஜமால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தனது தேர்தல் வாக்குறுதியின் போது கூறியதை கடுமையான போராட்டத்திற்கு பின் பெற்று தந்த 48 வது வார்டு கவுன்சிலரும். பொன்மலை பகுதி திமுக செயலாளருமான கொட்டப்பட்டு தர்மராஜ் அவர்களை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டி மேலும் அவரது பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்து சென்றனர்.