திருச்சி அருகே
மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் உள்பட 8 பேர் படுகாயம்.
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், குமுளுரில் உள்ள வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்,
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பிடெக் பட்டம்,
மக்கள் தொகை பெருக்கம், தொழிலாளர் பற்றாக்குறை,
உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை, வறுமை மற்றும் சுற்றுச்சூழல் அழுத்தத்தை ஒழிப்பதற்கான
தீவிர வளங்கள் போன்ற சவால்களை நோக்கி தொழில் நுட்ப வல்லுநர்களை உருவாக்கும் வகையில் கடந்த 1992 ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இதில் திருச்சி மட்டுமன்றி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் கல்லூரியில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டி நடைபெறுகிறது.
அந்த வகையில் கைப்பந்து போட்டி நடத்துவதற்கு ஏதுவாக விளையாட்டு மைதானம் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்றன.
இதில் கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது இரும்பு கம்பம் நடும் பணியில் அனைவரும் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக இரும்பு கம்பி மின்சார கம்பியில் பட்டு மின்சாரம் தாக்கியதில் ஐந்து மாணவர்கள் மற்றும் 3 தொழிலாளர் உட்பட 8 பேர் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தனர்.
இதனையடுத்து சக மாணவர்கள் உடனடியாக மின் இணைப்பை துண்டித்தனர்.
மேலும் காயமடைந்த 8 பேரையும் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சைக்கு
பிறகு அனைவரும் நலமுடன் உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து லால்குடி சரக காவல்துறை உதவி கண்காணிப்பாளர் அஜய் தங்கம் விசாரணை நடத்தி வருகிறார்.