திருச்சியில் மாநில அளவிலான இளையோர் டாட்ஜ் பால் போட்டியில் காஞ்சிபுரம், திருவள்ளூர் அணிகள் வெற்றி பெற்றது.
திருச்சியில் மாநில அளவிலான இளையோர்
டாட்ஜ் பால் போட்டியில் காஞ்சிபுரம், திருவள்ளூர் அணிகள் வெற்றி.
மாநில அளவிலான இளையோர் டாட்ஜ் பால் போட்டிகள் திருச்சி கருமண்டபம் ஆரோக்கிய மாதா பள்ளி வளாகத்தில் நடைபெற்றன.
இந்த போட்டியில் சென்னை, ஈரோடு, கடலூர், கோவை, நீலகிரி, திருச்சி உட்பட 17 மாவட் டங்களைச் சேர்ந்த 28 அணிகள் பங்கேற்றன.
போட்டிகளை ஆசிய எறிபந்து கழகத் தலைவர் மணி தொடங்கி வைத்தார். மாநில டாட்ஜ் பால் சங்கச் செயலாளர் சுகுமாறன், ஆரோக்கிய மாதா மெட்ரிக் பள்ளித் தாளாளர் விக்டர் ஜெயபாலன், தமிழ்நாடு எறிபந்து கழகத் துணைச் செயலாளர் பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருச்சி மாவட்ட டாட்ஜ் பால் கழகத் தலைவர் ரவிக்குமார், செயலாளர் வைஷாலி ஆகியோர் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
ஆண்கள் பிரிவில் காஞ்சிபுரம், வேலூர், திருச்சி அணிகளும், பெண்கள் பிரிவில் ஆகிய திருவள்ளூர், கோயம்புத்தூர், கடலூர் ஆகிய அணிகளும் முறையே முதல் 3 இடங்களைப் பிடித்தன.