திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியுடன் கோவை விஜே பயோடெக் நிறுவன உயிரி தகவல் தொழில்நுட்ப துறை புரிந்துணர்வ ஒப்பந்தம்.
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியுடன், கோவையை சேர்ந்த விஜே பயோடெக் நிறுவன கல்லூரி முதல்வர் முனைவர் தயாபரன் தலைமையில் விஜே பயோடெக் நிறுவனர் முனைவர் டாக்டர் விஜயகுமார் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி மற்றும்
விஜே பயோடெக் நிறுவனம் சார்பில்
உயிரி தகவல் தொழில்நுட்பத் துறை சார்பாக ஒரு நாள் பயிற்சி பட்டறை திருச்சியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் தயாபரன் மற்றும் விஜே பயோடெக் நிறுவனம்
முனைவர் டாக்டர் விஜயகுமார்,துறை தலைவர் வயலட் தயாபரன் முன்னிலையில் நடைபெற்ற இந்தபயிற்சி பட்டறையில் ஏராளமான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன் அடைந்தனர்.
முனைவர் வினித் சிந்தியா மற்றும் முனைவர் ஜாஸ்மின் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பின்னர் விஜே பயோடெக் நிறுவனர் முனைவர் டாக்டர் விஜயகுமார் கூறுகையில், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பயோடெக்னாலஜி துறை,
வி ஜே பயோடெக் உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது மேலும் பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ் துறையின் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டது.
இதன் மூலம் அவர்கள் பி சி ஆர் மற்றும் எலக்ட்ரோ ஃபோரசிஸ் இதுபோன்ற பயிற்சிகளை எடுத்துக்கொண்டனர்.
இந்த பயிற்சி இவர்களுக்கு வெளிநாடுகளில் சென்று பயில மற்றும் வெளிமாநிலங்களுக்கு பணிகளுக்கு செல்ல மற்றும் அரசு துறை சார்ந்த வேலைகளுக்கு செல்ல இது ஒரு முக்கியமான பயிற்சியாக வழங்கப்பட்டது,
இந்த பயிற்சி பட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.