பல்வேறு சம்பவங்களில்
மதுவுக்கு அடிமையான 2 பேர் தற்கொலை.
திருச்சி அருகே உள்ள வாத்தலை ஹரிஜன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 35) கூலி தொழிலாளியான இவர் குடி பழக்கத்திற்கு அடிமையானர். இதையடுத்து மனைவி மற்றும் உறவினர்கள் மதுப்பழக்கத்திலிருந்து அவரை விடுவிக்க கவுன்சிலிங் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து சிறிது காலம் மது அருந்தாமல் இருந்துள்ளார்.
பின்னர் மீண்டும் குடிப்பழக்கத்திற்கு ஆளானதால் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சாமிநாதன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.
உறவினர்கள் அவரை மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் சாமிநாதன் பரிதாபமாக இறந்தார் இதுகுறித்து அவரது மனைவி ரங்கநாயகி வாத்தலை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று சோமரசம்பேட்டை பகுதியிலும் மதுவுக்கு அடிமையான வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். சோமரசம்பேட்டை பள்ளக்காடு புது தெரு பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 38)கட்டிட தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதற்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார்.இருந்தபோதிலும் பூரணமாக குணமாக்க முடியவில்லை. இந்த நிலையில் சேகர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது மனைவி அன்னக்கிளி சோமரசம்பேட்டை போலீசில் புகார் செய்தார்.இதன் பெயரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.